கிழக்கு மாகாணம் - ஒரு சுருக்கப் பார்வை
-ஏ.ஸீ.எம்.முஸ்இல்-
இலங்கையில் உள்ள 9 மாகாணங்களுள் கிழக்கு மாகாணமும் ஒன்று. இது 9,996 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. இலங்கையின் மொத்தப் பரப்பளவில் இது 15.24 வீதமாகும்.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என மூன்று மாவட்டங்களை இது கொண்டுள்ளது. இங்கு 1,923,513 மக்கள் வாழ்கின்றார்கள். இவர்களுள் அம்பாறை மாவட்டத்தில் 802,252 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 636,642 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 484,619 பேரும் வாழ்கின்றனர்.
அம்பாறை மாவட்ட மக்களில் 300,280 பேர் சிங்களவர், 135,979 பேர் தமிழர்கள், 361,751 பேர் முஸ்லிம்கள். மிகுதி ஏனையோர்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களில் 4,358 பேர் சிங்களவர், 451,702 பேர் தமிழர்கள், 175,745 பேர் முஸ்லிம்கள். மிகுதி ஏனையோர்.
திருகோணமலை மாவட்டத்தில் 122,666 பேர் சிங்களவர், 143,856 பேர் தமிழர்கள், 215,100 பேர் முஸ்லிம்கள். மிகுதி ஏனையோர்.
இங்கு 45 பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ளன. அவை அம்பாறை மாவட்டத்தில் 20, மட்டக்களப்பு மாவட்டத்தில் 14, திருகோணமலை மாவட்டத்தில் 11 ஆகும்.
இம்மாகாணத்தில் 1078 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளன. இவற்றில் அம்பாறை மாவட்டத்தில் 503 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 345 கிராம உத்தியோகத்தர் பிரிவகளும், திருகோணமலை மாவட்டத்தில் 230 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் உள்ளன.
இங்கு 45 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. இவற்றில் 4 மாநகர சபைகள், 4 நகரசபைகள், 37 பிரதேச சபைகளாகும். மட்டக்களப்பு. கல்முனை, அக்கரைப்பற்று, திருகோணமலை என்பன மாநகர சபைகளாகும். அம்பாறை, காத்தான்குடி, ஏறாவூர்நகர், கிண்ணியா என்பன நகர சபைகளாகும்.
கிழக்கு மாகாணத்தில் 17 கல்வி வலயங்கள் உள்ளன. இவற்றில் அம்பாறை மாவட்டத்தில் 7 கல்வி வலயங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 கல்வி வலயங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 5 கல்வி வலயங்களும் உள்ளன.
இங்கு 1123 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 42 தேசியப் பாடசாலைகள், ஏனையவை மாகாணப் பாடசாலைகள். தேசியப் பாடசாலைகள் அம்பாறை மாவட்டத்தில் 17 உம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 உம், திருகோணமலை மாவட்டத்தில் 12 உம் காணப்படுகின்றன.
பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் 4 இங்கு காணப்படுகின்றன. அவை கல்முனை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை என்பவாகும். சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் 46 காணப்படுகின்றன. இவற்றில் 20 அம்பாறை மாவட்டத்திலும், 12 திருகோணமலை மாவட்டத்திலும், 14 மட்டக்களப்பு மாவட்டத்திலும் உள்ளன.
0 Comments