கவனம் செலுத்தப்பட வேண்டிய கல்முனையின் கல்வி நிலை
கிழக்கு மாகாணத்தில் பேசப்படும் ஒரு கல்வி வலயம் கல்முனை. கடந்த காலங்களில் இதன் கல்வி மட்டம் உயர்நிலையில் இருந்து வந்தமை இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்த வலயத்தில் கல்முனை முஸ்லிம், கல்முனை தமிழ், சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் ஆகிய பிரதேச பாடசாலைகள் உள்ளடங்குகின்றன.
சமீப காலமாக இவ்வலயத்தின் பெபேறுகள் திருப்தியளிக்கும் நிலையில் இல்லை. பரீட்சைப் பெறுபேற்றுத் தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
அண்மையில் வெளியிடப்பட்ட 2022 உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு நமது கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இம்முறை இவ்வலயத்திலிருந்து மொத்தமாக 2053 பேர் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். இவர்களில் 217 பேர் எல்லாப் படங்களிலிலும் W பெறுபேறு பெற்றுள்ளனர். அதாவது All F பெறுபேறு பெற்றுள்ளனர். இது மொத்தத்தில் 10.6 வீதமாகும்.
இது மிகவும் கவலையளிக்கும் தகவலாகும். இது போன்ற மோசமான பெறுபேறுகள் தான் இவ்வலயத்தை பின்நோக்கித் தள்ளி வருகின்றது. மாணவர்கள் தடம் புரண்டு சமுகரீதியான சவால்கள் அதிகரித்து வருகின்றன.
பாடப் பிரிவு ரீதியாக All W பெற்ற மாணவர்களது எண்ணிக்கை வருமாறு,
- கலை - 33
- உயிரியல் விஞ்ஞானம் - 71
- பௌதீக விஞ்ஞானம் - 64
- வர்த்தகம் - 27
- உயிரியல் தொழில்நுட்பம் - 8
- பொறியியல் தொழில்நுட்பம் - 10
- இப்பிரிவுகள் அல்லாதது - 4
இது குறித்தும், ஏனைய பெறுபேற்றுக் குறைபாடுகள் குறித்தும் ஆர்வமுள்ள அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
0 Comments