திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களும், உயிரியில் விஞ்ஞானக் கல்வியும்.
-ஏ.ஸீ.எம்.முஸ்இல்-
திருகோணமலை மாவட்டத்தில் 11 முஸ்லிம் பாடசாலைகளில் க.பொ.த உயர்தர விஞ்ஞானப் பிரிவு உள்ளது. இதில் 9 பாடசாலை மாணவர்கள் கடந்த 2021 இல் உயர்தர உயிரியல் விஞ்ஞானப் பிரிவு பரீட்சைக்குத் தோற்றினர்.
திருகோணமலை மாவட்டத்தின் 5 கல்வி வலயங்களுள் திருகோணமலை வடக்கு கல்வி வலயம் தவிர்ந்த ஏனைய 4 கல்வி வலயங்களில் உயர்தர விஞ்ஞானப் பிரிவு உள்ள முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன.
வலய ரீதியாக ஒவ்வொரு முஸ்லிம் பாடசாலையிலும் 2021 இல் பெறப்பட்ட உயிரியல் விஞ்ஞானப் பிரிவு பெறுபேறு தொடர்பான விபரங்கள் கீழே தரப்படுகின்றன.
S/N | School | Sat | Pass | % | All W |
01 | Zahira College | 76 | 58 | 76.3 | 5 |
02 | Pulmottai Central College | 20 | 16 | 80 | 2 |
திருகோணமலை கல்வி வலயத்தில் இரண்டு பாடசாலைகளில் இருந்து மொத்தம் 96 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். இவர்களில் 74 மாணவர்கள் 3 பாடங்களில் சித்தியடைந்துள்ளனர். இதன்படி வலய சித்த வீதம் 79.1 ஆகும்.
7 மாணவர்கள் எந்த ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை. 15 மாணவர்கள் குறைந்த சித்தியான 3 பாடங்களில் சித்தியடையவில்லை.
S/N | School | Sat | Pass | % | All W |
01 | Al Hilal Central College | 8 | 6 | 75 | 1 |
02 | Mutur Central College | 33 | 26 | 78.7 | 5 |
மூதூர் கல்வி வலயத்தில் இரண்டு பாடசாலைகளில் இருந்து மொத்தம் 41 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். இவர்களில் 32 மாணவர்கள் 3 பாடங்களில் சித்தியடைந்துள்ளனர். இதன்படி வலய சித்தி வீதம் 78.04 ஆகும்.
6 மாணவர்கள் எந்த ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை. 3 மாணவர்கள் குறைந்த சித்தியான 3 பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
S/N | School | Sat | Pass | % | All W |
01 | Al Aqza College | 15 | 10 | 66.6 | 2 |
02 | Kinniya Muslim Girls College | 144 | 87 | 60.4 | 22 |
03 | Kinniya Central College | 39 | 28 | 71.7 | 6 |
04 | Mullipoththanai Central College | 1 | 0 | 0 | 1 |
கிண்ணியா கல்வி வலயத்தில் நான்கு பாடசாலைகளில் இருந்து மொத்தம் 199 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். இவர்களில் 125 மாணவர்கள் 3 பாடங்களில் சித்தியடைந்துள்ளனர். இதன்படி வலய சித்தி வீதம் 62.81 ஆகும்.
31 மாணவர்கள் எந்த ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை. 43 மாணவர்கள் குறைந்த சித்தியான 3 பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
S/N | School | Sat | Pass | % | All W |
01 | Al Tharik M.V | 11 | 11 | 100 | 0 |
கந்தளாய் கல்வி வலயத்தில் ஒரு முஸ்லிம் பாடசாலையில் இருந்து 11 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். இவர்கள் அனைவரும் 3 பாடங்களில் சித்தியடைந்துள்ளனர். மூன்று பாடத்திலும் சித்தியடையாதவர் இங்கு எவருமில்லை.
இந்தப் பெறுபேறுகளின்படி கந்தளாய் அல் தாரிக் மகா வித்தியாலய பெறுபேறு நல்ல நிலையில் உள்ளது. இப்பாடசாலை எதிர் காலத்திலும் இதனைத் தக்க வைக்க முயற்சி எடுப்பதோடு பல்கலைக்கழகம் செல்லும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தத் தகவல்களின்படி மூதூரில் விஞ்ஞானப் பிரிவில் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறைவு. இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் ஏனைய வலயங்களை விட கிண்ணியா வலய சித்தி வீதம் குறைவு. இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வெண்டும்.
முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியைத் தவிர ஏனைய பாடசாலைகளைப் பொறுத்த வரை நல்ல சித்தி வீதங்களைப் பெற்றுள்ளன. முயற்சித்தால் இன்னும் இவற்றை அதிகரித்துக் கொள்ள முடியும்.
இதற்கு இரண்டு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
- எல்லாப் பாடங்களிலும் W பெறுபேறு பெறும் மாணவர் எண்ணிக்கையை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி சற்றுக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விஞ்ஞானப் பிரிவில் கற்கும் ஆற்றல் குறைந்தவர்களை ஆரம்பத்திலேயே இனங்கண்டு வேறு பாடப்பிரிவுகளுக்கு அவற்றை மாற்றி விட நடவடிக்கை எடுக்கலாம்.
- 3 பாடங்களிலும் சித்தியடைத் தவறும் மாணவர் எண்ணிக்கையை இல்லாமல் செய்ய வேண்டும். குறைந்த பட்சம் சகலரும் 3 பாடங்களிலும் சித்தியடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தேவையான உத்திகளை ஒவ்வொரு பாடசாலையும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதிபரும், சம்பந்தப் பட்ட ஆசிரியர்களும் கலந்துரையாட வேண்டும்.
0 Comments