உயர்தரப் பெறுபேற்றில் கிண்ணியா முன்னிலை வருவதற்கு கலைப்பிரிவே பங்களிப்புச் செய்துள்ளது
-ஏ.ஸீ.எம்.முஸ்இல்-
அண்மையில் வெளியான க.பொ.த (உயர்தர) 2022 (2023) பெறுபேற்றுப் பகுப்பாய்வின்படி கிண்ணியா வலயம் கிழக்கு மாகாணத்தில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2021 பெறுபேற்றின்படி கிழக்கில் 3 ஆம் இடத்திலிருந்த கிண்ணியா இம்முறை 2 ஆம் இடத்திற்குக்கு முன்னேறியுள்ளது.
இந்த முன்னேற்றத்திற்கான காரணங்களை ஆராய்கின்ற போது இதற்கு கலைப்பிரிவே பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளமை தெளிவாகின்றது. பரீட்சை தொடர்பான புள்ளிவிபரங்கள் ஊடாக இது உறுதிப் படுத்தப்படுகின்றது.
மாகாண ரீதியாக செய்யப்பட்ட பகுப்பாய்வின்படி ஒவ்வொரு பாடத்துறையிலும் கிண்ணியா வலயத்தின் நிலை வருமாறு:
Stream | Sat | Pass | Pass % | Provincial Rank |
Arts | 443 | 403 | 91.0 | 1 |
Bio. Technology | 18 | 17 | 94.4 | 3 |
Bio. Science | 179 | 112 | 62.6 | 6 |
Eng. Technology | 37 | 25 | 67.6 | 8 |
Phy. Science | 56 | 26 | 46.4 | 14 |
Commerce | 30 | 19 | 63.3 | 15 |
None | 1 | 0 | 0.0 | -- |
இந்தத் தகவல்களின்படி கிண்ணியா வலயத்தின் இந்த வெற்றியின் பின் கலைத்துறை இருப்பது நன்கு தெளிவாகின்றது.
அடுத்த நிலையில் மாணவர் தொகை அதிகம் உள்ள உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம் ஆகிய துறைகள் இன்னும் கொஞ்சம் சித்தி வீதத்தை அதிகரித்திருந்தால் கிண்ணியா வலயம் மாகாணத்தில் முதலிடம் பெற்றிருக்கும். இந்தத் தகவல்களின் மூலம் இதனைக் கண்டு கொள்ள முடியும்.
இங்கு சித்தி வீதம் மட்டும் பார்க்கப்பட்டே நிலை கணிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, ஒவ்வொரு மாணவரும் சாதாரண சித்தி பெறுவதில் என்ன தடை இருக்கின்றது என்பதை ஒவ்வொரு பாட ஆசிரியரும் இனங்கண்டு அதற்கு பரிகாரம் கண்டால் எல்லாத் துறையினதும் சித்தி வீதத்தைக் இலகுவாகக் அதிகரித்துக் கொள்ளலாம். இதன் மூலம் வலய முன்னேற்றத்திற்கு பங்களிப்புச் செய்யலாம்.
0 Comments